TNPSC Thervupettagam

அணுசக்தி அமைப்புகள் மற்றும் கைதிகள் பற்றிய பட்டியல்

January 5 , 2023 956 days 451 0
  • 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் அணுசக்தி நிலையங்களின் பட்டியலைப் பரிமாறிக் கொண்டன.
  • இரு தரப்பிலிருந்தும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தங்களது அணுசக்தி நிலையங்களைத் தாக்கிக் கொள்வதைத் தடுக்கிறது.
  • இந்தப் பட்டியல்கள் ஒரே நேரத்தில் இஸ்லாமாபாத் மற்றும் புது டெல்லியில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டன.
  • 2008 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அந்தந்த அரசுக் காவல்துறையின் காவலில் உள்ள கைதிகளின் பட்டியலையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டன.
  • தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 705 இந்தியர்கள், 51 பொதுமக்கள் மற்றும் 654 மீனவர்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ளது.
  • இந்தியா தனது காவலில் உள்ள 434 பாகிஸ்தானியர்கள், 339 பொதுமக்கள் மற்றும் 95 மீனவர்களின் பட்டியலைப் பகிர்ந்து கொண்டது.
  • 2008 ஆம் ஆண்டு உடன்படிக்கையானது, இரு நாடுகளிடமும் காவலில் வைக்கப் பட்டு உள்ள கைதிகளுக்கு அந்தந்த நாடுகளின் தூதரக அணுகலை வழங்குகிறது.
  • மேலும், ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று தத்தமது காவலில் உள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் இது குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்