மூத்த அணுசக்தி அறிவியலாளர் தினேஷ் குமார் சுக்லா, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (AERB) தலைவராக மூன்று ஆண்டு காலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
G. நாகேஸ்வர ராவிற்கு அடுத்த படியாக இவர் இப்பதவியினை ஏற்றார்.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆனது (AERB) 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டம் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி 1983 ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது.
இது அந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சில ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒழுங்குமுறைச் சார்ந்த அதிகாரமானது, 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டம் மற்றும் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் ஆகியவற்றிலிருந்துப் பெறப்பட்டது.
இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் அயனியாக்கும் திறன் கொண்ட கதிர்வீச்சு மற்றும் அணுசக்தியின் பயன்பாடு சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவொரு தேவையற்ற ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த வாரியத்தின் பணி ஆகும்.