இந்தியாவின் முதல் காலாட்படை அருங்காட்சியகமானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் அமைந்த மோவ் எனுமிடத்தில் பொதுமக்களின் வருகைக்குத் திறக்கப் பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகமானது இந்திய நாட்டிலேயே முதன்மையானதும், உலகில் இரண்டாவதும் ஆகும்.
இதற்கு முன், அமெரிக்காவில் இது போன்ற ஒரு அருங்காட்சியகம் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
இந்தக் காலாட்படை அருங்காட்சியகமானது 1747 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலாட்படையின் வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கியது.