TNPSC Thervupettagam

அணுசக்தியால் இயங்கும் சீர்வேக எறிகணை – ரஷ்யா

August 21 , 2025 16 hrs 0 min 29 0
  • ரஷ்ய நாடானது, நோவயா ஜெம்லியாவில் அணுசக்தியால் இயங்கும் 9M730 பியூரெவெஸ்ட்னிக் எனும் சீர்வேக எறிகணையை பரிசோதிக்க தயாராகி வருகிறது.
  • இந்த எறிகணை அதன் உந்துதலுக்கு ஓர் அணு உலையைப் பயன்படுத்துகிறது, இதனால் அது வரம்பற்றத் தாக்குதல் தூரத்தையும் உலகளாவிய தாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
  • இந்தச் சோதனையைக் கண்காணிக்க ரோசாட்டம் நிறுவனத்தின் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • இந்தச் சோதனை மண்டலத்திற்கு அருகில் வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்க அமெரிக்கா அதன் WC-135R "nuke sniffer" எனும் நுகர்விக் கருவியை அனுப்பியது.
  • உக்ரைன் போர் குறித்த புடின்-டிரம்ப் சந்திப்புக்கு முன்னதாக இந்தச் சோதனை நடைபெற உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்