TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஓசோன் துளை 2026

November 20 , 2026 10 hrs 0 min 44 0
  • நாசா (NASA) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) 48 ஆண்டுகால கண்காணிப்பில், 2026 ஆம் ஆண்டின் அண்டார்டிக் ஓசோன் துளை ஏழாவது பெரிய துளையாகப் பதிவாகியுள்ளது.
  • அண்டார்டிக் ஓசோன் துளை என்பது அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள ஓசோன் படலத்தின் பருவகால மெலிதலாகும்; இது முக்கியமாக தெற்கு அரைக்கோளத்தின் வசந்த காலத்தில் (ஆகஸ்ட்–நவம்பர்) நிகழ்கிறது.
  • குளோரோஃபுளோரோகார்பன்கள் (CFCs) போன்ற ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பொருட்கள் அடுக்கு மண்டலத்தில் (Stratosphere) உள்ள ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் குளோரினை வெளியிடுவதால் இது உருவாகிறது.
  • வழக்கத்திற்கு மாறான சக்திவாய்ந்த துருவச் சுழல் (Polar vortex) மற்றும் தீவிர வானிலை ஆகியவை இதன் பெரிய அளவிற்குக் காரணமாக அமைந்தன.
  • 1987 ஆம் ஆண்டின் மாண்ட்ரீல் நெறிமுறை (Montreal Protocol) ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பொருட்களைக் குறைக்க உதவியதோடு, நீண்டகால ஓசோன் படல மீட்சிக்கும் ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்