அதிக அளவு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு - மத்தியப் பிரதேசம்
June 6 , 2026 4 days 78 0
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) 2023-24-இன்படி, மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சராசரியான 19% உடன் ஒப்பிடுகையில், மத்தியப் பிரதேசம் 23.8% குழந்தைகள் மெலிவுத்தன்மையை (உயரத்திற்கு ஏற்ற எடை இன்மை) பதிவு செய்துள்ள நிலையில் இது இந்தியாவிலேயே மிக அதிக அளவாகும்.
அம்மாநிலத்தில் 39.7% குழந்தைகள் எடைக்குறைவுடன் (வயதுக்கு ஏற்ற எடை இன்மை) உள்ளதோடு இது ஜார்க்கண்டிற்கு (41.1%) அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது அதிகபட்சமாகும்.
குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை (வயதுக்கு ஏற்ற உயரம் இன்மை) 31.4% ஆக இருந்த அதே வேளையில் முதல் ஆறு மாதங்களுக்கான பிரத்தியேக தாய்ப்பால் வழங்குதல் 56.4% ஆகக் குறைந்துள்ளது.
NFHS-6 இன் படி, 6 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளில் 12% பேர் மட்டுமே குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவைப் பெற்றுள்ளனர்.