உலகின் சராசரி ஆயுட்காலம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் 73 ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
ஆயுட்கால பதிவில் முன்னணியில் உள்ள 25 நாடுகளில் பெரும்பாலானவை அதாவது மொத்தம் 16 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.
மொனாக்கோ எனும் சிறிய, பணக்கார நாடு ஆனது, மிக சராசரியாக 86.5 ஆண்டுகள் வசிக்கும் குடியிருப்பாளர்களுடனும், சுமார் 88 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் பெண்களுடன் முன்னணியில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சான் மரினோ (சுமார் 85.8 ஆண்டுகள்) மற்றும் ஹாங்காங் (85.6 ஆண்டுகள்) ஆகியவை உள்ளன என்பதோடு இவை இரண்டும் வாழ்க்கை மற்றும் சுகாதார அமைப்புகளின் உயர் தரத்தை வழங்குகின்றன.
ஜப்பான் (4), தென் கொரியா (5), சிங்கப்பூர் (10), மற்றும் ஹாங்காங் (3) உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் முதல் 10 இடங்களில் முன்னணியில் உள்ளன.
பிரான்சு (5.6 ஆண்டுகள்) மற்றும் ஜப்பான் (6.1 ஆண்டுகள்) போன்ற நாடுகளில் பாலின ஆயுட்கால இடைவெளி பெரிய அளவில் உள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சாராத நாடுகளில் ஆஸ்திரேலியா (8) மட்டுமே இரு பாலினத்திலும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுட்காலம் சுமார் 72.48 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் பெண்கள் சராசரியாக சுமார் 74.13 ஆண்டுகள் உயிர் வாழ்வதுடன் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்ற நிலையில் ஆண்கள் 70.95 ஆண்டுகள் வாழ்கின்றனர்.