சிறப்பான வரிவிதிப்பு இணக்கம் மற்றும் விரைவானப் பொருளாதார மீட்சி ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி வசூலானது இது வரை இல்லாத அளவிற்கு ரூ.1,67,540 கோடியை எட்டியது.
தற்போது பதிவான வசூலானது, மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்ட முந்தைய அதிக பட்ச வசூலான ரூ.1,42,095 கோடியை விட ரூ.25,000 கோடி அதிகமாகும்.
2022 ஏப்ரல் மாதத்தில், அதிகபட்சமாக ஏப்ரல் 20 அன்று ஒரே நாளில் அதிக வரி வசூல் செய்யப் பட்டது.
மாநில வாரியாக, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ரூ.27,495 கோடியும், அதனைத் தொடர்ந்து கர்நாடகா (ரூ.11,820 கோடி), குஜராத் (ரூ.11,264 கோடி), உத்தரப் பிரதேசம் (ரூ.8,534 கோடி), ஹரியானா (ரூ.8,197 கோடி) ஆகிய மாநிலங்களில் முறையே வரி வசூல் அளவானது பதிவாகியது.
மிகக் குறைவான அளவில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்த மாநிலங்களில் மிசோரம் வெறும் 46 கோடி என்ற வரி வசூலுடன் கடைசி இடத்தினையும் அதனைத் தொடர்ந்து நாகாலாந்து (ரூ 68 கோடி), மணிப்பூர் (ரூ 69 கோடி), திரிபுரா (ரூ 107 கோடி), மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (ரூ 196 கோடி) போன்ற மாநிலங்களும் உள்ளன.