இந்திய அரசின் கர்மயோகி திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான 47 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 18 மில்லியன் அரசு ஊழியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ள நிலையில் அவர்களுள் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உலக வங்கியின் நான்கு பிரிவுகளில் ஒன்றாக பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தச் செய்வதை உள்ளடக்கிய FY18-22 இந்தியத் தேசியக் கூட்டாண்மைக் கட்டமைப்பினுடன் இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.