TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் கருங்கரிமம்

June 10 , 2025 3 days 21 0
  • சமீபத்திய ஒரு ஆய்வில், இமயமலையில் கார்பனின் மிக நுண்ணிய கருங்கரிம (Black carbon) துகள்களின் அளவுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
  • கிழக்கு இமயமலையில் அதிக வெப்பமான பனி மேற்பரப்பு பதிவாகியுள்ளது அதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு இமயமலையில் பதிவாகியுள்ளது.
  • 2000–2009 முதல் 2020–2023 ஆம் ஆண்டு வரையில் சராசரி பனி மேற்பரப்பு வெப்பநிலை ஆனது -11.27 டிகிரி செல்சியசிலிருந்து -7.13°C ஆக அதிகரித்துள்ளது.
  • கருங்கரிமம் ஆனது பொதுவாக சூரிய ஒளியைச் உறிஞ்சுகிறது என்பதோடு அது மேற் பரப்பில் படிந்தால் அந்தப் பரப்பினை வெப்பமாக்கும்.
  • கருங்கரிமத்தின் முக்கிய உற்பத்திக் காரணிகளில் உயிரிப் பொருட்கள் எரிப்பு, புதை படிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் குறிப்பாக இதன் உமிழ்வுகளுக்கான முக்கியப் பகுதியாகச் செயல்படுகின்ற இந்திய-கங்கைச் சமவெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு திறந்த வெளி எரிப்பு ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்