அந்தமானில் புதிய கடற்படை விமானத் தளம் - INS KOHASSA
January 25 , 2019 2383 days 736 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள டிஜிலிபூரில் INS KOHASSA என்ற புதிய கடற்படை விமானத் தளத்தை கடற்படை தலைமை அட்மிரலான சுனில் லம்பா துவக்கி வைத்தார்.
இந்த விமானத் தளம் பாதுகாப்புத் துறைக்கும் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும். மேலும் இது ஒரு தனிப்பட்ட பிரிவாக செயல்படும்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள 3-வது விமான தளமாக, INS KOHASSA மலாக்கா சந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழையும் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணித்திடுவதற்குப் பயன்படுத்தப்படும்.