தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனாவின் நிறுவன தினமானது (செப்டம்பர் 25) “அந்தியோதயா திவாஸ்” ஆக அனுசரிக்கப்படுகின்றது.
இந்தத் தினமானது “கௌசல் சே கல் பதலேங்” (Kaushal Se Kal Badlenge) என்ற கருத்துருவின் கீழ் அனுசரிக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டமானது 15 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மீது கவனம் செலுத்துகின்றது.