மத்தியப் பணியாளர், பொது மக்கள் குறைகள் & ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 2019 ஆம் ஆண்டின் 4வது அனுபவ் விருதுகளை வழங்கினார்.
ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ‘பழமையான அனுபவத்தை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அனுபவ் தளம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்களின் அனுபவங்களை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதற்கான ஒரு விருது வழங்கும் திட்டமானது பின்னர் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது