ஆந்திரப் பிரதேச மாநிலமானது, அன்னதாதா சுகிபாவா பிரதான் மந்திரி கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டமானது ஆந்திரப் பிரதேச மாநில விவசாயிகளை நிதி ரீதியாக மேம்படுத்துவதையும் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேளாண் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சூப்பர் சிக்ஸ் முன்னேடுப்பானது, மூன்று தவணைகளில் ஆண்டிற்கு 20,000 ரூபாய் வரையிலான நிதி ஆதரவையும், ஓய்வூதிய உயர்வுகளையும், பெண்களுக்கு இலவச சேவைகளையும் உறுதியளிக்கிறது.
முக்கியத் திட்டங்களில் போலம் பிலுஸ்தோண்டி, 90% மானியத்துடன் கூடிய சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கத் தொழில்நுட்பம் சார்ந்தப் பயிர் ஆலோசனைகள் ஆகியவை அடங்கும்.