TNPSC Thervupettagam

அமெரிக்காவின் 6G ரகப் போர் விமானம்

August 27 , 2025 26 days 66 0
  • F-47 என்பது அமெரிக்க விமானப்படைக்கான அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான மேம்பட்ட போர் விமானமாகும்.
  • இந்த விமானம் லாக்ஹீட் மார்ட்டின் F-22 ராப்டர் விமானத்திற்கான மாற்றாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • NGAD (அடுத்த தலைமுறை நுட்பத்திலான மேம்பட்ட விமானப் படை) திட்டத்தின் கீழ் F-47 ரக விமானத்தினை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் போயிங் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
  • NGAD அமைப்பு என்பது ஆளில்லா விமானங்கள் மற்றும் மனிதர்கள் கொண்ட போர் விமானம் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளின் குழுவாகும்.
  • F-47 ஆனது எரிபொருள் மீண்டும் நிரப்ப வேண்டிய அவசியமின்றி 1,000 கடல் மைல்களுக்கு மேல் பறக்கும் திறன் கொண்டது.
  • இது Mach 2 அளவினை விட அதிக வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதன் வடிவமைப்பில் தற்போதைய ரேடாருக்குப் புலப்படாத விமானங்கள் தர நிலைகளுக்கு அப்பாற்பட்ட ரேடாருக்குப் புலப்படாத ++ அம்சங்கள் உள்ளன.
  • F-47 விமானத்தில் அதிக ஆற்றல் மற்றும் செயல்திறனுக்காக காலியம் நைட்ரைடைப் பயன்படுத்தி ரேடார் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்