அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாக உத்தரவானது, அமெரிக்க நாட்டவர்களுக்கு மருந்து விலைகளை சுமார் 30% முதல் 80% வரையில் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மிகவும் விரும்பத் தகுந்த தேசம் (MFN) என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த உத்தரவில் முன்மொழியப்பட்டது.
அதாவது, மருந்து நிறுவனங்கள் அமெரிக்க நுகர்வோருக்கு விற்கும் போது, பிற வெளி நாடுகளில் விற்பனை செய்யும் குறைந்த விலையை நிர்ணயிக்குமாறு கோரப்படும்.
MFN கொள்கை முதன்மையாகப் பகுதி B என வகைப்படுத்தப்பட்ட மருத்துவ நலத் திட்டம் / மெடிகேர் (ஒரு கூட்டாட்சிச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்) மருந்துகளை இலக்காக நிர்ணயிக்கிறது.
வழக்கமாக, மருத்துவரின் பரிந்துரை அவசியமான மருந்துகளானது ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரான்சு ஆகியவற்றினை விட அமெரிக்காவில் சராசரியாக இரண்டு முதல் நான்கு மடங்கு விலை அதிகமாகும்.