TNPSC Thervupettagam

அமேசான் காடுகளின் கார்பன் உறிஞ்சும் திறன்

November 14 , 2026 8 hrs 0 min 23 0
  • காடழிப்பு மற்றும் காட்டுத்தீ காரணமாக அமேசான் மழைக்காடுகள் வளிமண்டலத்தில் உறிஞ்சுவதை விட அதிக கார்பன் டை ஆக்சைடை (CO₂) வெளியிடுவதாக நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • 2010 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நான்கு அமேசான் இடங்களில் ஆராய்ச்சி விமானங்களைப் பயன்படுத்தி வளிமண்டல CO₂ அளவை அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் இந்தக் காடு நிகர கார்பன் மூலமாக மாறியுள்ளதைக் கண்டறிந்தனர்.
  • காட்டுத்தீ காரணமாக அமேசான் அது உறிஞ்சியதை விட 1.17 பில்லியன் மெட்ரிக் டன் அதிக கார்பனை வெளியேற்றியது; 2024 ஆம் ஆண்டில், காடழிப்பில் 38% காட்டுத்தீ காரணமாகவே நிகழ்ந்துள்ளது.
  • 2010 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சுரங்கப் பகுதிகள் 272%, மேய்ச்சல் பகுதிகள் 19% மற்றும் சோயாபீன் தோட்டப் பகுதிகள் 193% அதிகரித்துள்ளன.
  • அமேசான் மழைக்காடுகள் ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது, சுமார் ஐந்து மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் தாவரங்கள் மற்றும் மண்ணில் சுமார் 100 பில்லியன் டன் கார்பனைச் சேமிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்