இந்தியப் போட்டித் திறன் ஆணையமானது அமெரிக்காவின் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும் பியூச்சர் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தின் அமைப்பான பியூச்சர் கூப்பன்ஸ் என்ற நிறுவனத்துடனான 2019 ஆம் ஆண்டின் அமேசான் ஒப்பந்தத்தினையும் அந்த ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் பெறும் போது அது பற்றிய சில உண்மைகளை மறைத்ததற்காக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.