ஒடிசா மாநிலமானது புத்தெழுச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தின் செயல்படுத்துதலில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட இந்த தரவரிசையின்படி, ஒடிசா மாநிலமானது தனது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இதற்குப் பிறகு சண்டிகர் ஒன்றியப் பிரதேசமும் தெலுங்கானா மாநிலமும் இடம் பிடித்துள்ளன.
அம்ருத் (AMRUT) திட்டம்
அம்ருத் திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இது நகர்ப்புற மீட்டெடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதலின் மூலம் நகர்ப்புற மாற்றத்திற்கான வலுவான கழிவுநீர் அமைப்புகள் மற்றும் நீர் விநியோகத்தை உறுதி செய்துள்ளது.