November 10 , 2025
2 days
25
- தஜிகிஸ்தானில் உள்ள அய்னி விமானத் தளத்திலிருந்து இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை நிறைவு செய்துள்ளது.
- இந்தியாவிற்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் தற்போது காலாவதியானதைத் தொடர்ந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
- துஷான்பே அருகே அமைந்துள்ள அய்னி விமானத் தளம், இந்தியாவின் ஒரே வெளி நாட்டு இராணுவத் தளமாகும்.
- இந்தியா இந்தத் தளத்தை வலுப்படுத்தப்பட்ட ஓடுபாதை, எரிபொருள் கிடங்குகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் மேம்படுத்தியது.
- தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியக் குடி மக்களை வெளியேற்றுவதற்காக 2021 ஆம் ஆண்டில் இந்தத் தளம் பயன்படுத்தப் பட்டது.
- இந்த நடவடிக்கை ஆனது, மத்திய ஆசியாவில் இந்தியாவின் செயல்பாட்டு இராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

Post Views:
25