தேசிய நிகழ்நேர கொள்முதல் வலைதளமான அரசு மின்னணுச் சந்தையை (Government e-Marketplace - GeM) அரசாங்க ஒப்பந்தத் தாரர்களும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த (ஒட்டு மொத்தமாக வாங்குவதற்கு மட்டுமே) மத்திய அரசு அனுமதியளித்துள்ளது,.
தற்போது, GeM ஆனது அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறைப் பிரிவுகளை மட்டுமே இந்த வலைதளத்தில் இருந்து வாங்க அனுமதிக்கின்றது.
இது பற்றி
GeM, தேசிய பொது கொள்முதல் வலைதளம் என்பது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவு 8 ஐச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.
GeM ஆனது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தினால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று அறிமுகப் படுத்தப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதையும் ஒழுங்குபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.