புத்தாக்கத் திட்டத்திற்கான புத்தாக்கச் சவால்களை நேருக்கு நேர் சந்திக்கும் திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, மத்தியப் புவி அறிவியல் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
2020 ஆம் ஆண்டு வரை MI மற்றும் அதன் திட்டங்களால் வழங்கக் கூடியவற்றை ஒருங்கிணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
தூய்மையான எரிசக்திக் கண்டுபிடிப்புகளில் உள்ள முக்கியமான இடைவெளிகளைக் கண்டறிவதும் 2020ஆம் ஆண்டிற்கு அப்பால் இந்த இடைவெளிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உற்பத்தித் திறனை 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட்டிற்கு மேல் அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி
இந்தியப் பிரதமர் புத்தாக்கத் திட்டம் என்ற பெயரை உருவாக்கினார்.
இது 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான உறுப்பு நாடுகளின் 21வது மாநாட்டில் கலந்து கொண்ட 20 நாடுகளால் தொடங்கப் பட்டது.
MI ஆனது தற்போது 24 உறுப்பு நாடுகளையும் ஐரோப்பிய ஆணையத்தையும் உறுப்பினராகக் கொண்டுள்ளது.
இதில் உள்ள உறுப்பு நாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மீதான அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளன.
இந்தத் திட்டமானது காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயல்படும் தொழில்நுட்பத் துறைகளின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல்விளக்கம் (research, development, and demonstration - RD&D) ஆகியவற்றைத் துரிதப் படுத்தும்.