அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் மேலாண்மை வழிகாட்டுதல்கள்
June 23 , 2025 10 days 60 0
கர்ப்ப காலத்தில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயை (SCD) மேலாண்மை செய்வதற்கான அதன் முதல் உலகளாவிய வழிகாட்டுதலை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வழிகாட்டுதலில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து ஊட்ட நிரப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் உள்ளன.
SCD பாதிப்பு உள்ள பெண்கள், பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பிற்கான வாய்ப்பு இல்லாதவர்களை விட சுமார் 4 முதல் 11 மடங்கு அதிகமான அளவிற்கு ஆபத்தினைச் சந்திக்கின்றனர்.
அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் என்பது ஒரு மரபணு வழி இரத்தக் கோளாறு ஆகும்.
இது இரத்தச் சிவப்பணுக்களை மிகவும் இறுக்கமாக்கி அரிவாள் வடிவத்திலானதாக வடிவமைக்கிறது.