இந்தியாவில் முதல்முறையாக பாரதி ஏர்டெல் நிறுவனமானது அருகலை வழியாக பேச்சுத் தொடர்பை (Voice over Wi-Fi - VoWiFi) அறிமுகப் படுத்தியுள்ளது.
இது உயர் தெளிவுத் திறன் கொண்ட (high definition - HD) குரல் அழைப்புகளை மேற்கொள்ள மற்றும் குரல் அழைப்புகளைப் பெற அகலப் பட்டையின் மூலம் கிடைக்கக் கூடிய அதிவேக இணைய இணைப்பைப் பயன்படுத்துகின்றது.
அருகலை வசதியைப் பயன்படுத்துவதால் பயனர்கள் இந்த அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இது குறிப்பாக செல்லிடப் பேசி அமைப்புகள் வலுவாக இல்லாத பகுதிகளுக்கு அருகலை வழியாக பேச்சுத் தொடர்பு வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.