TNPSC Thervupettagam

அர்த் கங்கா

September 3 , 2022 993 days 795 0
  • ஜல் சக்தி அமைச்சகமானது நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ‘அர்த் கங்கா’ என்ற புதிய முன்னெடுப்பினைச் சமீபத்தில் தொடங்கியது.
  • இது கங்கை நதிக்கரையில் அமைந்தப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுழிய அளவு செலவினம் இன்றி மேற்கொள்ளப்படும் இயற்கை வேளாண்மை அதன் முதல் நிலையாகும்.
  • ஆற்றின் இரு கரைகளிலும் 10 கி.மீ தொலைவிற்கு இரசாயனமற்ற வேளாண்மை மற்றும் கோவர்தன் யோஜனா மூலம் பசுவின் சாணத்தை உரமாக மாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும்.
  • இது விவசாயிகளுக்கு ‘ஒவ்வொரு சொட்டிலும், அதிக வருமானம்’ மற்றும் ‘கோபர் தன்’ ஆகியவற்றின் பலன்களைப் பெற வழி வகை செய்யும்.
  • நமாமி கங்கை திட்டம் ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கப்படுகிறது.
  • இது தேசியத் தூயக் கங்கை திட்டத்தினால் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்