5வது ராஷ்ட்ரிய போஷான் மாஹ் (தேசிய ஊட்டச்சத்து மாதம்)
September 3 , 2022 994 days 566 0
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது போஷான் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 முதல் 30 வரை 5வது ராஷ்ட்ரிய போஷான் மாஹ் எனப்படும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தினைக் கொண்டாட உள்ளது.
2022 ஆம் ஆண்டு போஷான் மாஹ் கொண்டாட்டத்தின் மையக் கருத்துரு, “மஹிலா அவுர் ஸ்வஸ்த்யா” மற்றும் “பச்சா அவுர் ஷிக்சா” என்பதாகும்.
போஷான் அபியான் என்ற திட்டமானது 6 வயதிற்குட்பட்டக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலத் திட்ட வழங்கீடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08 ஆம் தேதியன்றுப் பிரதமர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.
போஷான் என்பதன் விரிவாக்கம் "முழுமையான ஊட்டச்சத்து வழங்கீட்டிற்கான பிரதம மந்திரியின் உயர்நோக்குத் திட்டம் அல்லது அபியான்” என்பதாகும்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம், விநியோகம், பரவல் மற்றும் உடல்நலம், ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டப் பலன்கள், நோய் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் திட்டப் பலன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு ஆதரவு முயற்சியாக மிஷன் போஷான் 2.0 திட்டத்தினை அரசாங்கம் தொடங்கியுள்ளது.