கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசி – செராவாக்
September 3 , 2022 994 days 675 0
இந்திய சீரம் நிறுவனம் (SII) மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆகியவை இணைந்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசியை அறிமுகப் படுத்தியது.
இந்தத் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.
இந்தத் தடுப்பூசிக்கு நான்கு மாற்றுருக்களுக்கு எதிராகச் செயல்படும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி (qHPV) என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப் பட்டு உள்ளது.
இது இந்திய சீரம் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு அதற்கு ஜூலை மாதத்தில் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப் பட்டது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகளவில் பதிவாகியுள்ள கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான பாதிப்புகள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளது.