ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது குஜராத்தின் ஹசிரா நகரில், இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் மிகப்பெரிய கார்பன் இழை உற்பத்தி ஆலையைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி இது குறித்து அறிவித்தார்.
இந்த ஆலை என்பது எண்ணெயிலிருந்து இரசாயனத்தினைப் பிரித்தெடுக்கும் அந்த நிறுவனத்தின் (O2C) ஒரு பகுதியாக உருவாக்கப்படும்.
கார்பன் இழை என்பது தொழில்துறை மற்றும் வாகனத் துறையில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ள ஒரு நவீன காலப் பொருளாகும்.
இது அதிக கடத்துத்திறன் கொண்ட ஓர் இலகுரக ஆனால் வலுவான பொருளாகும்.
மேலும், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் இராணுவத் துறைகளில் எஃகுக்கு ஒரு மாற்றாக இதன் தேவை அதிகரித்து வருகிறது.