TNPSC Thervupettagam

அறிவிக்கப்பட்ட பேரிடர்

March 17 , 2020 1871 days 662 0
  • COVID-19 பாதிப்பை "அறிவிக்கப்பட்ட பேரிடர்" என்று இந்தியா அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு உணவு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீர் வழங்குதல் ஆகியவற்றிற்கு மாநிலப் பேரிடர் மீட்பு நிதியானது (SDRF - State Disaster Response Fund) தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், SDRF நிதியானது சூறாவளி, பூகம்பம், வறட்சி, நிலச் சரிவு, ஆலங்கட்டி மழை, மேகமூட்டம், பனிச்சரிவு, உறைபனி, பூச்சி தாக்குதல் மற்றும் குளிர் காற்று ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • சிக்கலான மருத்துவச் சூழ்நிலைகள் அல்லது தொற்றுநோய்கள் ஆகியவை அறிவிக்கப்பட்ட பேரிடர் பட்டியலின் கீழ் இல்லை.
  • எனவே, மத்திய அரசு COVID-19 நோய் பாதிப்பை அறிவிக்கப்பட்ட பேரிடரின் கீழ் சேர்த்துள்ளது.
  • இது இப்போது கொரோனா வைரஸிற்குச் சிகிச்சையளிப்பதற்காக இந்த நிதியைப் பயன்படுத்த மாநில அரசுகளை அனுமதிக்கின்றது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ஆல் அமைக்கப்பட்ட SDRF நிதியானது 13வது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்