அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செயல்பாட்டு அளவீடு 2026
November 9 , 2026 5 days 82 0
நிதி ஆயோக்கின் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் (S&T) செயல்பாட்டு அளவீட்டில் ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் காப்புரிமை விண்ணப்பங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
2024–25 ஆம் ஆண்டில், தமிழ்நாடு 44,611 ஆராய்ச்சி வெளியீடுகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (29,298) மற்றும் மகாராஷ்டிரா (28,947) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
காப்புரிமை விண்ணப்பங்களில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளன.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான ஊடாடும் தளமாக நிதி ஆயோக் மூலம் இந்த செயல்பாட்டு அளவீடு உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஆராய்ச்சி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நிறுவனங்கள், ஆழ்-தொழில்நுட்ப (deep-tech) புத்தொழில் நிறுவனங்கள், காப்பகங்கள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் காப்புரிமைகள் குறித்த தரவுகளை ஒருங்கிணைக்கிறது.
இது சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சியின் தரம், தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை ஒப்பிடுவதை ஆதரிக்கிறது.