இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS), "அலையாத்தி காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்தல் — வழிகாட்டுதல்கள்" என்ற தலைப்பில் அலையாத்தி காடுகள் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் முதல் தர நிலையை தயாரித்து வருகிறது.
இந்த வரைவுத் தரநிலையானது, இந்தியாவின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
அலையாத்தி காடுகள் என்பவை இடைப்பட்டகழி மண்டலங்கள், முகத்துவாரங்கள், டெல்டாக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் உப்புத் தன்மையை தாங்கி வளரக்கூடிய கடலோரக் காடுகள் ஆகும்.
ஒருங்கிணைந்த மறுசீரமைப்புத் தரநிலையை உருவாக்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் BIS குழுவால் EED 06: WG 02 உருவாக்கப்பட்டது.
இந்தத் தரநிலையானது மரம் நடுதல் முறைகள், மக்கும் பைகளைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கி உள்ளது.
MISHTI (கடலோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்னெடுப்பு) திட்டம் இந்தியாவின் கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அலையாத்தி காடுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.