இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அல் மொஹெத் அல் ஹிந்தி 2021 எனப்படும் தங்களது முதல் கடற்படைப் பயிற்சியினை மேற்கொள்ள உள்ளன.
இப்பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் வழிகாட்டு ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் கொச்சி சவுதி அரேபியாவைச் சென்று அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிடையே வளர்ந்துவரும் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளின் பிரதிபலிப்பை இந்த கூட்டுக் கடற்படைப் பயிற்சி வெளிப்படுத்தும்.
அபுதாபியின் கடற்கரையருகே மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படையுடனான கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ஐ.என்.எஸ். கொச்சி கப்பல் சவுதி அரேபியாவைச் சென்று அடைந்தது.
ஐ.என்.எஸ். கொச்சி
இது கொல்கத்தா ரகத்தைச் சேர்ந்த, ரேடாரில் புலப்படாமல் மறைய வல்ல வகையில் அமைந்த இரண்டாவது வழிகாட்டு ஏவுகணை அழிப்புக் கப்பலாகும்.
இது Project 15A எனும் குறியீட்டுப் பெயரின் கீழ், இந்தியக் கடற்படைக்காக வேண்டி கட்டமைக்கப் பட்டது.
இக்கப்பலானது மும்பையிலுள்ள மசகான் டாக் லிமிடெட் (Mazagon Dock Limited) என்ற நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.
இது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டது.