உத்தரப் பிரதேச அரசானது ‘காகோரி சதித் திட்டம்’ எனும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு விடுதலை இயக்க நிகழ்வினை “காகோரி இரயில் நடவடிக்கை” எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
ஆயுதங்கள் வாங்குவதற்காக 1925 ஆம் ஆண்டில் காகோரி என்னுமிடத்தில் இரயில் கொள்ளையில் ஈடுபட்டதற்காகத் தூக்கிலிடப்பட்ட புரட்சியாளர்களை கௌரவிக்கும் விதமாக இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பு
இந்த இரயில் கொள்ளையானது லக்னோவிற்கு அருகில் காகோரி என்னுமிடத்தில் நடைபெற்றது.
ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸஃபகுல்லா கான் ஆகியோர் இதற்கானத் திட்டங்களை வகுத்தவர்களாவர்.
இவர்கள் இந்துஸ்தான் குடியரசுக் கூட்டணியைச் சேர்ந்தவர்களாவர்.
இக்கொள்ளையில் ஈடுபட்டதற்காக ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்ஃபகுல்லா கான் மற்றும் ரோஷன் சிங் ஆகியோர் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று தூக்கிலிடப் பட்டனர்.