2021 ஆம் ஆண்டு மத்திய ஊழல்தடுப்பு ஆணைய (திருத்தம்) மசோதா மற்றும் 2021 ஆம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் துறை நிறுவல் (திருத்தம்) மசோதா ஆகியவற்றை மக்களவை நிறைவேற்றியது.
இந்த மசோதாக்கள் இந்தத் துறைகள் தொடர்பாக இந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சில அவசரச் சட்டங்களுக்கு ஈடாக இயற்றப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்களின் முக்கிய நோக்கமானது மத்தியப் புலனாய்வு வாரியம் மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிப்பதே ஆகும்.