9வது இந்திய திறன் அறிக்கையானது (2022) வீபாக்ஸ் என்ற அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
அதிக வேலைவாய்ப்புத் திறன்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்த அறிக்கையின் கருத்துருவானது, “Rebuilding and Re engineering the Future of Work” என்பதாகும்.
இந்த அறிக்கையானது வளர்ந்து வரும் இந்தியாவில் திறன் சார்ந்த தேவை மற்றும் வழங்கீடுகளுடன் பொருந்தக் கூடிய எதிர்கால வேலை, கல்வி மற்றும் திறன்கள் பற்றிய ஒரு முழுநீள அறிக்கையாகும்.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அதிக வேலைவாய்ப்புத் தேவை உடைய 3 மாநிலங்களாகும்.
78% தேர்வாளர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ள புனே நகரம் மிகவும் அதிக வேலைவாய்ப்பு வளங்களைக் கொண்ட நகரமாகும்.