TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் பிராந்திய தரவு மையம்

June 2 , 2026 12 days 100 0
  • 2026 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் செயல்பாட்டில் உள்ள தரவு மையங்களின் திறனில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா 1.6 கிகாவாட் (GW) செயல்பாட்டு தரவு மையத் திறனையும், 3.1 கிகாவாட் கட்டுமான மற்றும் திட்டமிடல் நிலையிலும் கொண்டுள்ளது.
  • மும்பை இந்தியாவின் மிகப்பெரிய தரவு மைய மையமாகத் திகழ்கிறது மற்றும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1 கிகாவாட் செயல்பாட்டுத் திறனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தின் முதன்மையான இரண்டாம் நிலை தரவு மைய சந்தையாக ஹைதராபாத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு இதில் உலக அளவில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • செயற்கை நுண்ணறிவுப் (AI) பயன்பாடு, மேகக் கணிமையியல் விரிவாக்கம் மற்றும் நிறுவனங்களின் அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்