TNPSC Thervupettagam

இந்தியாவின் கடல்சார் டிஜிட்டல் சீர்திருத்தங்கள்

June 3 , 2026 11 days 91 0
  • மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் 37-வது ஸ்தாபன தினத்தில், தளவாடங்கள் துறைமுக செயல்திறன் குறியீடு (LPPI) 2024-25 மற்றும் நான்கு டிஜிட்டல் கடல்சார் தளங்களை மத்திய அரசு தொடங்கியது.
  • சாகர் ஆங்கலன் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட LPPI, கப்பல் துறைமுகத்தில் தங்கும் நேரம், கப்பல்துறை பயன்படுத்தப்படாத நேரம் மற்றும் நங்கூரமிடுவதற்கு முன் காத்திருக்கும் நேரம் போன்ற குறிகாட்டிகளைப் பயன்படுத்தி துறைமுகங்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது.
  • மின்-நாவிக் குறைதீர்க்கும் தொகுதி, மின்-சமுத்ரா கப்பல் பதிவு தொகுதி, மருத்துவப் பயிற்சியாளர் தொகுதி மற்றும் ஒருங்கிணைந்த கப்பல் மறுசுழற்சி தளம் ஆகியவை நான்கு டிஜிட்டல் முன்னெடுப்புகளாகும்.
  • காகிதமில்லா, டிஜிட்டல் மற்றும் திறமையான கடல்சார் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தால் இந்த முயற்சிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • துறைமுகத் திறனை மேம்படுத்துதல், கப்பல் பதிவை எளிதாக்குதல், மாலுமிகளின் நலனை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் கடல்சார் துறை வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இச்சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்