2026 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்திற்காக 1.74 லட்சம் குவிண்டால் அளவிலான தேசிய விதை சேமிப்பகம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தாமதமான பருவமழை, வறட்சி அல்லது மறு விதைப்புத் தேவைகளின் போது, விதைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சேமிப்பகம் உருவாக்கப் பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்திற்கு இந்தியாவிற்கு சுமார் 173 லட்சம் குவிண்டால் விதைகள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 192 லட்சம் குவிண்டால் விதைகள் இருப்பில் உள்ளன.
தற்போதுள்ள விதை இருப்பு தேசிய தேவையை விட சுமார் 11% அதிகமாகும்.
அரசுத் திட்டங்களின் பலன்கள் விவசாயிகளுக்கு சிறப்பாகச் சென்றடைவதை மேம்படுத்துவதற்காக 9.76 கோடிக்கும் அதிகமான உழவர் அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.