ஆசிய வில்வித்தை கோப்பைப் போட்டி 2022 - 2வது கட்டம்
May 17 , 2022 1610 days 913 0
ஈராக்கின் சுலைமானியா நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை கோப்பையின் 2 ஆம் கட்டப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக விளையாடினர்.
இந்திய வில்வித்தை வீரர்கள் 8 தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் ஈராக்கின் சுலைமானியா நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை கோப்பையின் 2 ஆம் கட்டப் போட்டியில் தங்களது பங்கேற்பினை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
பர்னீத் கவுர், அதிதி சுவாமி மற்றும் சாக்சி சௌத்ரி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி ஈராக்கில் நடைபெற்ற கண்ட அளவிலானப் போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
பிரதமேஷ் ஃபுகே, ரிஷப் யாதவ் மற்றும் ஜாவ்கர் சமாதான் அடங்கிய ஆண்கள் அணி இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆசியா வில்வித்தை கோப்பைப் போட்டியில் பிரத்மேஷ் ஃபுகே & பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய கலப்பு இணை அணி இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.