ஆசியா மற்றும் பசிபிக் பகுதி SDG முன்னேற்ற அறிக்கை 2026
February 25 , 2026 16 days 75 0
ஆசியா மற்றும் பசிபிக் பகுதி SDG முன்னேற்ற அறிக்கை 2026, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் (ESCAP) வெளியிடப்பட்டது.
2030 ஆம் ஆண்டுக்குள் அளவிடக்கூடிய 117 நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இலக்குகளில் 103 இலக்குகளை இந்தப் பகுதி தவறவிட வாய்ப்புள்ளது என்று அறிக்கை எச்சரிக்கிறது.
தற்போது 14 இலக்குகள் மட்டுமே அதன் சரியான பாதையில் உள்ளன, தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் கிட்டத்தட்ட 88% இலக்குகள் தவறவிடப்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
காலநிலை நடவடிக்கை, கடல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான பின்னடைவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்பதோடு இது நீண்டகாலப் பொருளாதார மற்றும் பெரும் சமூக முன்னேற்றத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அதிகரித்து வரும் உமிழ்வுகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் கடல் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் 2030 இலக்கை அடைவதற்கு முக்கிய தடைகளாக உள்ளன.
இருப்பினும், இந்தப் பிராந்தியம், குறிப்பாக SDG 9 இன் கீழ், தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் ஒரு வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளன.