பிராந்தியப் பாதுகாப்பு, கடல்சார் தகராறுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த விவாதங்களுடன் 49-வது ஆசியான் (ASEAN) உச்சிமாநாடு பிலிப்பைன்ஸின் மணிலாவில் தொடங்கியது.
“Navigating Our Future, Together” என்பது இந்த மாநாட்டின் கருத்துருவாகும்.
1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் பாங்காக் பிரகடனத்தின் மூலம் ஆசியான் நிறுவப்பட்டது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை இதன் ஐந்து நிறுவன உறுப்பினர்களாக இருந்தன.
முதல் ஆசியான் உச்சிமாநாடு 1976 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது.
இந்த உச்சிமாநாடு தென் சீனக் கடல் நடத்தை விதிகள், மியான்மர் நெருக்கடி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
2027 ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸ் சிங்கப்பூரிடம் ஒப்படைத்தது.