TNPSC Thervupettagam

ஆன்லைனில் மருந்துகள் விற்பதற்கு மத்திய அரசு தடை விதிப்பு

December 10 , 2019 2077 days 639 0
  • தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின் படி, உரிமம் பெறாத ஆன்லைன் (நிகழ்நேர) தளங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யத் தடை விதிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இந்தியப் பொது மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Controller General of India - DCGI) உத்தரவிட்டுள்ளது.
  • 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs and Cosmetics - D&C) சட்டத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப் பட்டதாக தில்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கின்றது.
  • D&C சட்டம், 1940 மற்றும் D&C விதிகள் 1945 ஆகியவற்றின் கீழ், போலி மருந்துகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநிலத்தில் உள்ள உரிமம் வழங்கும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்