ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு (ABHA) விரிவாக்கம்
July 23 , 2026 62 days 226 0
தமிழ்நாடு 2.54 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகளை (ABHA) உருவாக்கி உள்ளதுடன், அவற்றை அரசு சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு 3.0 (HMIS 3.0) உடன் ஒருங்கிணைத்து வருகிறது.
ABHA என்பது 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழ் உள்ள 14 இலக்க தனித்துவமான சுகாதார அடையாளங் காட்டி ஆகும் என்பதோடு இது சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் சேமிக்க மற்றும் அணுக உதவுகிறது.
இந்த ஒருங்கிணைப்பு, நோயாளிகளின் ஒப்புதலுடன், தனிப்பட்ட சுகாதாரப் பதிவு (PHR) செயலி மூலம் மருந்துச் சீட்டுகள், ஆய்வக அறிக்கைகள் மற்றும் கண்டறியும் படங்கள் போன்ற டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை அணுக அனுமதிக்கிறது.
சுகாதாரப் பாதுகாப்பின் தொடர்ச்சியை மேம்படுத்தவும், காகிதப் பதிவுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ABDM ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு இடையே சுகாதாரத் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளவும் ABHA உதவுகிறது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 50% பேருக்கு ABHA அடையாள எண்களை உருவாக்க தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.