ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதாரப் பெட்டகம்
December 29 , 2021 1302 days 617 0
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்துடன் இணைந்து இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சுகாதாரப் பெட்டகத்தினை டாக்பிரைம் டெக் என்ற ஒரு நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
நாட்டில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் தொடங்கப் பட்டது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதாரப் பெட்டகம் ஆனது டிஜிட்டல் முறையிலான மற்றும் சுய-ஒப்புதல் சார்ந்த சுகாதாரத் தரவு மேலாண்மை அமைப்பை எந்தக் கட்டணமும் இல்லாமல் பயனாளிகளுக்கு வழங்கும்.
இது சுகாதார ஆவணங்களை மின்னணு முறையில் சேமித்து நிர்வகிக்கும்.