மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் புது தில்லியில் ஆரோக்கிய மந்தன் என்ற 2 நாள் தேசிய பட்டறையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு தேசிய சுகாதார ஆணையத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இது செப்டம்பர் 23, 2018 அன்று தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நோக்கத்தைக் கொண்டது.
இந்தப் பட்டறையில், ஆயுஷ்மான் பாரத்திற்காக ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ என்ற புதிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கைபேசி செயலியானது அறிமுகப்படுத்தப் பட்டது.
ஸ்டார்ட் அப் இந்தியாவுடன் இணைந்து ஆயுஷ்மான் பாரத் ஸ்டார்ட்-அப் கிராண்ட் சேலஞ்ச் ஆனது தொடங்கப் பட்டுள்ளது.
இப்பட்டறையின் போது ஒரு நினைவு தபால்தலையும் அறிமுகப் படுத்தப்பட்டது.