“ஒரு விரிவான அணுகுமுறையை வளர்ப்பதற்கானப் பிராந்திய மாநாடு: ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் கடத்துபவர்களின் சட்டவிரோத கடத்தல் மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் போதைப் பொருள் நிலைமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது” என்ற 2 நாள் மாநாடு மணிப்பூரில் உள்ள இம்பாலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை மணிப்பூர் மாநில அரசு மற்றும் போதைப் பொருள் & குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், தெற்காசியாவின் பிராந்திய அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் சட்டவிரோதக் கடத்தலை எதிர்ப்பதற்கு ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மைச் செயல்முறையுடன் கூடுதலாக தெற்காசியப் பிராந்தியப் புலனாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை (SARICC - South Asia Regional Intelligence and Coordination Centre) வலுப்படுத்தவும் இந்த மாநாடு பரிந்துரைக்கிறது.