TNPSC Thervupettagam

ஆர்க்டிக் அடிவானத்திற்கு அப்பால் பார்க்கக் கூடிய ரேடார் அமைப்பு

June 28 , 2026 10 days 96 0
  • ஆர்க்டிக் அடிவானத்திற்கு அப்பால் பார்க்கக் கூடிய ரேடார் அமைப்பு (A-OTHR) எனும் அமைப்பைக் கொள்முதல் செய்வதற்காக ஆஸ்திரேலியா மற்றும் BAE சிஸ்டம்ஸ் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டது.
  • A-OTHR அமைப்பானது, சாதாரண ரேடார் வரம்பிற்கு அப்பால் உள்ள விமானங்கள் மற்றும் எறிகணைகளைக் கண்டறிய, அயனிமண்டலத்திலிருந்து பிரதிபலிக்கும் உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்த அமைப்பானது ஆஸ்திரேலியாவின் ஜிண்டாலீ செயல்பாட்டு ரேடார் வலையமைப்பு (JORN) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதுடன் மேலும் இது கனடாவின் வட அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்புத் தலைமையக (NORAD) நவீனமயமாக்கல் திட்டத்தை ஆதரிக்கிறது.
  • நோராட் (NORAD - வட அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்புத் தலைமையகம்) என்பது கனடா மற்றும் அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இத்திட்டம் 2029 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தனது ஆரம்பகட்ட செயல்பாட்டுத் திறனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதோடு மேலும் இது 2026-2033 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கனடாவில் ஆண்டுதோறும் சுமார் 2,270 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்