TNPSC Thervupettagam

இந்திய விண்வெளித் துறை மின்னணு-பட்டியல்

June 29 , 2026 8 days 123 0
  • புது தில்லியில் நடைபெற்ற 5-வது இந்திய விண்வெளி காங்கிரஸில் (ISC) இந்தியாவின் முதல் 'இந்திய விண்வெளித் துறை மின்னணு-பட்டியல்' வெளியிடப்பட்டது.
  • இந்த இந்திய விண்வெளித் துறை மின்னணு-பட்டியலானது, விண்வெளித் துறையின் திறன்களை உள்ளடக்கிய இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் களஞ்சியமாகும்.
  • இது இந்தியாவின் விண்வெளிச் சூழலமைப்பின் மேல்நிலை/தொடக்கநிலை, இடைநிலை மற்றும் கீழ்நிலை/இறுதிநிலைப் பிரிவுகளில் உள்ள நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது.
  • இந்தப் பட்டியலானது இந்திய விண்வெளித் துறை நிறுவனங்களின் திறன்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது.
  • இது தொழில்துறையினர், அரசாங்கம், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேசப் பங்குதாரர்களுக்காகத் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் ஒரு தளமாக செயல் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்