TNPSC Thervupettagam

ஆறு கூடுதல் இமயமலைச் சிகரங்கள் - நேபாளம்

November 4 , 2026 3 days 74 0
  • காத்மண்டுவில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மலையேறுதல் கூட்டமைப்பின் (UIAA) பொதுச் சபையில் தனி சர்வதேச அங்கீகாரத்திற்காக 8,000 மீட்டருக்கு மேல் உள்ள கூடுதல் ஆறு இமயமலைச் சிகரங்களை நேபாளம் முன்மொழிந்துள்ளது.
  • யாளுங் காங் (8,505 மீ), கஞ்சன்ஜங்கா தெற்கு (8,476 மீ), கஞ்சன்ஜங்கா மத்தி (8,473 மீ), லோட்சே மத்தி (8,410 மீ), லோட்சே ஷார் (8,400 மீ) மற்றும் யாளுங் காங் மேற்கு (8,077 மீ) ஆகியவையே அந்த ஆறு சிகரங்களாகும்.
  • இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 8,000 மீட்டருக்கு மேல் (எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்கள்) சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலகின் 20 சிகரங்களில் 14 சிகரங்களை நேபாளம் கொண்டிருக்கும்.
  • தற்போது, உலகளவில் 14 எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்கள் மட்டுமே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 8 நேபாளத்தில் உள்ளன.
  • நேபாள மலையேறுதல் சங்கத்தால் (NMA) இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இது சர்வதேச மதிப்பீட்டிற்கு உட்பட்டதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்