TNPSC Thervupettagam

யெரெவன் பாதை - COP17 பல்லுயிர்தன்மை உச்சிமாநாடு

November 4 , 2026 3 days 81 0
  • பல்லுயிர்தன்மைப் பெருக்கம் தொடர்பான மாநாட்டின் (CBD) 17 வது தரப்பினரின் மாநாடு (COP17) ஆர்மீனியாவில் நிறைவடைந்தது, இதில் 2030 ஆம் ஆண்டு வரை பல்லுயிர்தன்மை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வழிநடத்தும் 'யெரெவன் பாதை' ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப் பல்லுயிர்தன்மை, ஆக்கிரமிப்பு வேற்று உயிரினங்கள் மற்றும் கடல்சார் பல்லுயிர்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 50 நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • தீங்கு விளைவிக்கும் மானியங்களைக் குறைப்பது, பல்லுயிர்தன்மை பாதுகாப்பிற்கான நிதியை அதிகரிப்பது மற்றும் குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்தன்மைக் கட்டமைப்புடன் (KMGBF) தேசியத் திட்டங்களை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் யெரெவன் பாதை கவனம் செலுத்துகிறது.
  • பல்லுயிர்தன்மை பாதுகாப்பிற்கான புதிய நிதியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி உறுதியளிக்கப்பட்டது, மேலும் சரத்து 8(j)-இன் கீழ் புதிய நிரந்தர துணை அமைப்புக்காக செவன் வழிகாட்டுதல்கள் நிறுவப்பட்டன.
  • பிற மரபுகள் மற்றும் நகோயா நெறிமுறையின் பலதரப்பு நன்மைப் பகிர்வு பொறிமுறையுடன் ஒத்துழைப்பது குறித்த முடிவுகள் ஈக்வடாரில் (2028) நடைபெறும் COP18 மாநாட்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்